மாஸ்...இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி!**
Dinamaalai December 20, 2025 09:48 AM

 

ஆமதாபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மா – சுப்மன் கில் தொடக்க ஜோடியின் வேகமான தொடக்கத்தால் ரன் வேட்டையை ஆரம்பித்தது. தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா இணை அசத்த, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவிக்கப்பட்டது.

நடுவில் சூர்யகுமார் யாதவ் சொதப்பினாலும், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ரசிகர்களை எழுந்து நிற்க வைத்தது. வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 26 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். திலக் வர்மா அமைதியாக ஆடி 73 ரன்கள் சேர்த்து அணியின் ரன் மழைக்கு அடித்தளம் போட்டார். இறுதியில் ஷிவம் துபே முதல் பந்திலேயே சிக்சர் அடித்து வேகத்தை மேலும் உயர்த்தினார்.

232 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா, இந்திய பந்துவீச்சில் திணறியது. வருண் சக்ரவர்த்தியின் சுழலில் விக்கெட்டுகள் சரிந்தன. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண், ஆட்டத்தின் திசையை மாற்றினார். பும்ரா, பாண்ட்யா, அர்ஷ்தீப் ஆகியோரும் கைகொடுக்க, தென் ஆப்பிரிக்கா 201 ரன்களில் முடங்கியது. இதனால் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.