தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் அளித்த பேட்டி தற்போது பெரும் கேலிக்குள்ளாகி வருகிறது. அந்த இளைஞரிடம், “விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்?” என்று கேட்டதற்கு, அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாமல், “எல்லாமே செய்வார்” என்று மழுப்பலாகப் பதிலளிக்கிறார். மேலும், கட்சியின் கொள்கைத் தலைவர்களில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, தற்போதைய கொள்கைத் தலைவர்களைக் குறிப்பிடாமல் அதிமுகவின் செங்கோட்டையன் பற்றிப் பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற முக்கியக் கேள்விக்கு, முதலில் “போஸ்டிங்” (Posting) கொடுப்பதைப் பற்றித் தேவையில்லாமல் பேசிவிட்டு, பின்னர் நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என்று கூறி கட்சியினரையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “அரசியல் தெரியாமல் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்” என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
View this post on InstagramA post shared by நாம்_தமிழர்_ஆற்காடு (@naam_tamilar_arcot)
குறிப்பாக, தவெக தொண்டர்களை விமர்சிப்பவர்கள் கூறும் “தற்குறி” என்ற வார்த்தை இவரைப் போன்றவர்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது என்று பலரும் கோபமாகவும் வேடிக்கையாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.