தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. அந்தப் பெண் பேட்டியின் போது, “சில தற்குறிங்க ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்னால் அதற்கு அப்புறம் என்ன என்று கேட்கிறார்கள்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சமம் என்று கூடவா தெரியாது?” என மிகத் தைரியமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் கொள்கை வாசகமான அந்தத் திருக்குறளின் முதல் அடியை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவர்களைத் தற்குறி என அவர் விமர்சித்ததுதான் இப்போது விவாதமாகியுள்ளது. உண்மையில், அந்தத் திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்பதாகும். பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும், அவர்கள் செய்யும் செயல்களால் மட்டுமே சிறப்பு மாறுபடும் என்பதே அதன் பொருள்.
View this post on InstagramA post shared by தகவல் தொழில்நுட்பப் பாசறை – நாம் தமிழர் கட்சி (@ntk_family_tn)
ஆனால், முழுமையான குறள் தெரியாமல் “சமம்” என்று தானே ஒரு விளக்கத்தைக் கூறிவிட்டு, மற்றவர்களை ஏளனம் செய்த அந்தப் பெண்ணின் அறியாமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “உண்மையான தற்குறி யார் என்று இப்போது தெரிகிறது” என நெட்டிசன்கள் வேடிக்கையாகவும் காரசாரமாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.