எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில், மேடையில் இருந்த நபர் கீழே அமர்ந்திருந்த மாணவிகளிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், “உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார். அந்த நபர் பதிலை எதிர்பார்க்கும் முன்பே, அங்கிருந்த மாணவிகள் அனைவரும் ஒரே குரலில் “விஜய்” என்று உற்சாகமாகச் சத்தமிட்டனர்.
மாணவிகளின் இந்தப் பதிலால் அந்த இடமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. மேடை அமைத்தது திமுகவாக இருந்தாலும், அங்கு வந்திருந்த மாணவிகளின் மனதில் விஜய்யே நீக்கமற நிறைந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த நபர் மாணவிகளை உற்சாகப்படுத்த விஜய் பேசுவது போலவே மிமிக்ரி செய்தும் காட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இது திமுகவினருக்குப் பெரும் அதிர்ச்சியையும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.