இன்று கடைசி தேதி... மாணவர்களுக்கு 12,000/- உதவித்தொகை... எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!
Dinamaalai December 20, 2025 09:48 AM

பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு ஒரு முக்கியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதற்கு NMMS திட்டம் என்று பெயர். இது தேசிய வருவாய் வழி உதவித்தொகை ஆகும்.

ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களின் படிப்பு பாதியில் நிற்காமல் இருக்க இந்த திட்டம் உதவி செய்கிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் ₹48,000 வரை உதவித்தொகை கிடைக்கும். 8ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பணம் கிடைக்கும். வருடத்திற்கு ₹12,000 வீதம் 4 வருடங்களுக்குக் கொடுக்கப்படும். அதாவது மாதம் ₹1,000 வீதம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க சில முக்கிய விதிமுறைகள் உள்ளன.

மாணவர்கள் 7ம் வகுப்பில் 55% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். பெற்றோரின் வருட வருமானம் ₹3,50,000-க்குள் இருக்க வேண்டும். அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படிப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த திட்டத்தில் பயன் பெற வாய்ப்பு இல்லை.

இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பம் டிசம்பர் 12ம் தேதியன்று தொடங்கியது. ஆனால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் இன்று டிசம்பர் 20ம் வரை உள்ளது. தேர்வு அடுத்த மாதம் ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர்கள் உடனடியாகத் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.