மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள ‘விபி-ஜி ராம் ஜி’ மசோதாவிற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக விளங்கிய 100 நாள் வேலை திட்டத்தை மோடி அரசு ஒரே இரவில் அழித்துவிட்டதாக அவர் சாடியுள்ளார்.
புதிய மசோதா, வேலைவாய்ப்பு வழங்கும் அதிகாரத்தை டெல்லியிடம் ஒப்படைப்பதன் மூலம் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாகவும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குறிப்பாக பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். நிபுணர் ஆலோசனையின்றி, ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மாநிலங்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து போராட போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இத்திட்டத்தை நலிவடைய செய்வதன் மூலம் ஏழைகளின் இறுதி பாதுகாப்பு அரணை அரசு தகர்ப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Edited by Mahendran