ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போலவே நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஆச்சரியம் கொடுத்திருக்கிறார். அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் ஜேசனோ ‘எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை’ என சொல்லிவிட்டார் லண்டனில் சினிமா இயக்கம் தொடர்பான சில படிப்புகளையும் ஜேசன் படித்தார் என சொல்லப்படுகிறது.
அதன்பின் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென லைகா புரடெக்ஷன் தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு பக்கம் விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விஜய் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுன் கூட பேசுவதில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இப்போதும் விஜய் சென்னை நீலாங்கரையில் தனிமையில்தான் வசித்து வருகிறார்.
சந்தீப் கிஷன் ஹீரோவாக வைத்து சிக்மா என்கிற படத்தை எடுத்து வருகிறார் ஜேசன். விஜயின் மகனை இயக்குனராக பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் தனது மனைவி ஷோபனாவுடன் ஊடகம் ஒன்றில் பேசிய ஜேசனின் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘ஜேசன் இயக்குனராக போகிறேன் என என்னிடம் சொன்னபோது ‘உனக்கு என்னப்பா.. வீட்டிலேயே ஒரு சூப்பர் ஸ்டார் இருக்கிறார்.. அவரை வச்சி படமெடுத்தா படம் கண்டிப்பா ஹிட்டு.. உனக்கு பெரிய பிரச்சினையே இல்லை’ என்று சொன்னேன்.
ஆனால் அவரோ ‘இல்ல தாத்தா என் மைண்ட்ல விஜய் சேதுபதிதான் இருக்கார்., நான் என்னை நிரூபித்துவிட்டு அப்புறம் அப்பாவ வச்சு படம் எடுப்பேன்’ என்று சொன்னார் அவரின் தன்னம்பிக்கையை பார்த்த போது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஒரு இயக்குனர் அப்படித்தான் யோசிக்க வேண்டும்.. அப்போதுதான் இவர் நம் இனம் ன்று தெரிந்து கொண்டேன்’ என சொல்லி சந்தோஷப்பட்டார் எஸ்.ஏ.சி.