சமூக வலைதளங்களில் அவ்வப்போது நம் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தரும் வீடியோக்கள். அந்த வகையில், தற்போது ஒரு ரயில் ஓட்டுநரின் மனிதாபிமானச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொதுவாக ரயில் நிலையத்தில் இருந்து ஒருமுறை ரயில் புறப்பட்டுவிட்டால், பயணிகள் ஏறத் தவறினாலும் அது மீண்டும் நிற்காது.
ஆனால், இந்த வீடியோவில் ரயில் நகரத் தொடங்கிய பிறகு, ஒரு முதிய தம்பதியால் அதில் ஏற முடியாமல் போனதைக் கண்ட லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி அவர்களை ஏற்றியுள்ளார். அந்த முதியவர்களின் கோரிக்கையை ஏற்று அவர் செய்த இந்த செயல், இணையவாசிகளின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது.
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த 26 வினாடி வீடியோவில், ரயில் ஓட்டுநர் வாசலில் நின்று கொண்டிருப்பதையும், நடைமேடையில் தவித்த முதியவர்கள் சைகை காட்டியவுடன் அவர் ரயிலை நிறுத்துவதையும் காணலாம். “கருணையே உண்மையான பக்தி” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
“>
“விதிமுறைகளை விட மனிதாபிமானம் பெரியது” என்றும், “இப்படிப்பட்ட மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் அழகாக இருக்கிறது” என்றும் நெட்டிசன்கள் அந்த ஓட்டுநரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.