சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண்ணைப் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயல்கின்றனர். அப்போது அந்தப் பெண்ணுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண் ஆத்திரமடைந்து, காவலரை நோக்கி மிகவும் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் நிதானம் இழந்த காவலர், அந்தப் பெண்ணைப் பலமாகத் தாக்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட இந்தப் பெண் ஒன்றும் அப்பாவி கிடையாது என்றும், கடமையில் இருந்த அதிகாரியை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியதே இந்த அசம்பாவிதத்திற்குத் தொடக்கம் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணைத் தாக்குவது தவறுதான் என்றாலும், நிஜமாகவே உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவரை இப்படி அநாகரிகமாகத் திட்டினால் யாரால் அமைதியாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் இந்தப் பதிவு எழுப்பியுள்ளது.