பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சாண்ட்ரா (Sandra), படுக்கையறையில் செய்த ஒரு செயல் தற்போது இணையதளத்தில் கடுமையான விமர்சனங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொதுவான படுக்கையறையில், எவ்வித கூச்சமும் இன்றி தனது கையில் இருக்கும் முடிகளை ட்ரிம் (Trim) செய்வதும், நகங்களை வெட்டுவதுமாக அவர் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எந்தவொரு துணியோ அல்லது பாதுகாப்பு உறையோ விரிப்பில் இல்லாமல், நேரடியாகப் படுக்கையிலேயே அவர் இத்தகைய சுத்தமற்ற காரியங்களைச் செய்வது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது அடிப்படை ஒழுக்கம் மற்றும் சுகாதாரமற்ற செயல் எனப் பலரும் சாடி வருகின்றனர்.
“தனது தனிப்பட்ட உலகில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், மற்றவர்களைப் பற்றிய அக்கறை அவருக்கு இல்லை” என்றும், “அடிப்படை நாகரிகம் தெரியாத இவர் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியற்றவர்” என்றும் நெட்டிசன்கள் எக்ஸ் (X) தளத்தில் கடுமையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.