பொதுவாக பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்தில் அந்த காலத்தில் ஓய்வெடுக்க அனுப்பி விடுவதுண்டு .மேலும் வீட்டில் ஒரு ஓரமாக அவர்களை அந்த காலத்தில் ஒதுங்கி இருக்க வைத்து விடுவதுண்டு இதற்கு பல்வேறு காரணம் உண்டு அந்த நேரத்தில் மாதம் மூணு நாள் ஓய்வெடுக்க சொல்வதுண்டு .ஆனால் இந்நாளில் அந்த பழக்கம் முற்றிலும் போய் விட்டது .இந்த மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு சக்த்தி தரும் பானம் பற்றி பார்க்கலாம்
பீட்ரூட், செலரி, வெள்ளரிக்காய், ஆப்பிள் ஆகிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் உடலுக்குப் போதிய அளவு சக்தி கொடுக்கிறது.
1.பெண்களுக்கு மாதவிடாயின் போது இடுப்பு, தொடை, மார்பு பகுதி என உடலின் பல்வேறு இடங்களில் வலி ஏற்படும்.
2.அதேபோல பெண்களுக்கு மாதவிடாயின் போது அடிவயிற்றுப் பகுதியில் பிடிப்புகளும் அதிகமாக இருக்கும்.
3.பெண்களுக்கு மாதவிடாயின் நேரத்தில் நிறைய பேர் சாப்பிடவே மாட்டார்கள். அது மிகவும் தவறானது.
4.அதேபோலபெண்களுக்கு மாதவிடாயின் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்,
5.பெண்களுக்கு மாதவிடாயின் போது பழச்சாறுகள் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு சீராக இல்லாத போதுதான் அதிகமாக வலி இருக்கும். அதை சீர்படுத்த பைனாப்பிள் உதவி செய்யும்.
7.பைனாப்பிளில் உள்ள ப்ரோமெலனின் என்னும் என்சைம் அடிவயிற்றில் ஏற்படும் தசைப் பிடிப்புகளைக் குறைக்கிறது எனவே பெண்களுக்கு மாதவிடாயின் போது இந்த ஜூஸ் குடிக்கலாம் .
8.ஆரோக்கியமான கேரட்டும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியையும் அசௌகரியத்தையும் குறைக்கிறது.
9.பைனாப்பிள் மற்றும் கேரட்டை தண்ணீர் ஊற்றி அரைத்தால் பைனாப்பிள்-கேரட் ஜூஸ் ரெடி.அதனை வடிகட்டி குடிக்கவேண்டும்.
10.மாதவிடாய் சமயத்தில் அசௌகரியமும் சோம்பலும் இருக்கும். இதை சரிசெய்யவும் வலியைக் குறைக்கவும் இந்த பீட்ரூட், வெள்ளரிக்காய் ஜூஸ் உதவி புரியும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்