3 நாளைக்கு 10 லட்சமா? கடைசில டிமிக்கி கொடுத்த பிரபல காமெடி நடிகர்
CineReporters Tamil December 22, 2025 11:48 AM

சினிமாவின் எதார்த்தம்:

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் தயாரிப்பாளருக்கும் நடிகர்களுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. இதில் பெரும்பாலும் நடிகர் கார்த்திக் பெயர் தான் அடிபட்டுக்கொண்டே வரும். பல தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சொன்ன தேதியில் கார்த்திக் வராமல் படத்தையே ட்ராப் செய்து இருக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு லட்சங்களில் நஷ்டம் அடைந்திருக்கின்றது. அதை திருப்பி கேட்டாலும் கார்த்திக்கிடம் பணம் வந்தால் திரும்ப வராது என்று கார்த்திக்கே கூறுவார் என பல பிரபலங்கள் பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

இது இன்று நேற்று இல்லை காலங்காலமாக நடந்து கொண்டு தான் வருகின்றது. தயாரிப்பாளர் ஒன்னும் வானத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்களும் பல பைனான்ஸர்களிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்கி எப்படியாவது ஒரு படத்தை கொடுத்து வெற்றி பெற்று நாமும் உயர்ந்து விட மாட்டோமா என்று எண்ணி தான் இந்த சினிமாத்துறைக்குள் வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்களின் செயல்களால் அவர்களின் வாழ்க்கையும் கடைசியில் கேள்விக்குறியாகி விடுகிறது. இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இதைப்பற்றி கூறும் பொழுது சினிமாவின் எதார்த்தமே இப்படித்தான். அதை அந்தந்த காலகட்டத்திற்குள் கேட்டு வாங்கி விட வேண்டும்.

பிரபல அந்த நடிகர்:

காலம் போன நேரத்தில் அதைப்பற்றி இப்போது பேசி புலம்பிக் கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் கிடையாது என கார்த்திக் பிரச்சினையை பற்றி மறைமுகமாக கூறினார் தனஞ்செயன். ஆனால் தனக்கே இப்படி ஒரு அனுபவம் நடந்திருக்கிறது என ஒரு சம்பவத்தை கூறினார். தெலுங்கில் ஒரு பிரபல காமெடி நடிகர். கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் அவர் நடித்திருக்கிறார். தெலுங்கில் ஒரு படம் எடுக்கலாம் என முடிவு செய்திருந்தோம். அந்தப் படத்தில் இந்த நடிகருக்கு என ஒரு கேரக்டர் இருந்ததாக என்னுடைய மேனேஜர் என்னிடம் இருந்து கூறினார்.

ஆனால் அந்த காலகட்டத்தில் அவர் கேட்டவுடன் யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை. இவர் கால்ஷீட் கொடுக்க மாட்டாரே என நான் யோசித்தேன். ஆனால் என்னுடைய மேனேஜர் அவரை நான் சம்மதிக்க வைக்கிறேன். அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என கூறினார். அதன்படி என்னுடைய மேனேஜரும் அந்த நடிகரிடம் போய் கேட்க நான் யாருக்கும் கால்ஷீட் கொடுக்க மாட்டேன். நீ கேட்கிறாய் என நான் கொடுக்கிறேன் என மூன்று நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார். அது மட்டுமல்ல அட்வான்ஸ் 5 லட்சம் கொடுத்தால் தான் நான் நடிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

அக்ரிமெண்டா? எனக்கா?

அதன்படி தனஞ்செயன் ஐந்து லட்சம் கொடுக்க படம் ஆரம்பிக்கும் பொழுது படத்தில் அந்த கேரக்டருக்கு வேலையே இல்லையாம். இந்த கேரக்டர் செட் ஆகாது என படத்தின் இயக்குனர் சொல்ல படத்திலிருந்து அந்த கேரக்டரையே தூக்கி இருக்கிறார்கள். ஆனால் அட்வான்ஸ் கொடுக்கும் பொழுது தனஞ்செயன் அக்ரீமெண்ட் போட்டுக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த காமெடி நடிகர் நான் எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அக்ரிமெண்ட்டா? எல்லாம் வாய் வழியாகத்தான் என சொல்லி எந்த ஒரு அக்ரிமென்ட்டும் இல்லாமல் தான் ஐந்து லட்சம் ரூபாயை அட்வான்ஸாக வாங்கி இருக்கிறார்.

படம் ட்ராப்பானதும் தனஞ்செயன் தன்னுடைய மேனேஜரை வைத்து கொடுத்த அட்வான்ஸை திருப்பி கேட்க அனுப்பி இருக்கிறார். மேனேஜரும் சரி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் அந்த நடிகரை போய் பார்க்க அவரை திட்டி அனுப்பி விட்டாராம். மீதி 5 லட்சம் கொடுத்தால் மூன்று நாளைக்கு நீ சொல்கிற படத்தில் நடிக்கிறேன். இல்லையெனில் அட்வான்ஸ் திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறி விரட்டி விட்டாராம்.

இதைப் பற்றி தனஞ்செயன் கூறும்பொழுது இப்படித்தான் இருக்கும் சினிமாவின் போக்கு. இது மாதிரி நான் நிறைய பேரிடம் பணத்தை இழந்து இருக்கிறேன். ஆனால் அக்ரீமெண்ட் மட்டும் இருந்திருந்தால் இதை ஒரு புகாராக நான் எழுப்பி தெலுங்கு சினிமா சங்கத்தில் கொண்டு போய் சேர்த்திருக்க முடியும். இப்பொழுது என்னிடம் எந்த ஒரு அக்ரீமெண்ட்டும் கிடையாது. அதற்கான சாட்சியும் கிடையாது என்பதால் அந்த பணம் போனது போனது தான் என தனஞ்செயன் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.