“நிஜமான அக்வா மேன் இவர்தானா?”.. தண்ணீருக்குள் நடனத் திருவிழா நடத்திய இளைஞர்.. வைரலாகும் நீர் சாகச வீடியோ..!!!
SeithiSolai Tamil December 22, 2025 11:48 AM

தண்ணீருக்குள் மூச்சடக்கி நிற்பதே சவாலான விஷயம், ஆனால் ஒரு இளைஞர் தண்ணீருக்குள் நின்றபடி நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தண்ணீருக்கு அடியில் மிகவும் அமைதியாகவும், சமநிலையுடனும் நிற்கிறார்.

அடுத்த நொடியே, அவர் தனது கைகளை உயர்த்தி, மிக நேர்த்தியான நடன அசைவுகளுடன் மெதுவாக மேல்நோக்கிச் செல்லும் காட்சி பார்ப்பதற்கு ஒரு மாயாஜாலம் போல உள்ளது. தண்ணீருக்குள் இப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் யாராலும் செயல்பட முடியுமா என நெட்டிசன்கள் வியந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hydroman (@hydroman_333)