ஈரானில் ‘சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை’ எனக் கூறி மாஷா அமினி கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. தற்போது ஈரான் முதல் வங்காளதேசம் வரை பல நாடுகளில், பெண்கள் கட்டாயங்களுக்குப் பணியாதபோது அவர்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்படுவதை இந்தச் சமீபத்திய காணொளி உறுதிப்படுத்துகிறது. பொது இடத்தில் பெண்கள் நாற்காலியால் தாக்கப்படும் இந்தக் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் உள்ள சில முற்போக்காளர்கள் ஹிஜாப் என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் என வாதிடுகையில், பல நாடுகளில் அது கட்டாயமாகத் திணிக்கப்படுவதையும், மீறுபவர்கள் இது போன்ற வன்முறைக்கு ஆளாவதையும் சுட்டிக்காட்டி இணையதளவாசிகள் விவாதித்து வருகின்றனர். ஆடை சுதந்திரம் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கிறதா என்ற கேள்வியையும் இந்தப் பதிவு முன்வைக்கிறது.