'தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் நவீன இந்தியாவை வடிவமைத்தவர் வாஜ்பாய்'; துணை ஜனாதிபதி புகழாரம்..!
Seithipunal Tamil December 22, 2025 09:48 AM

மத்திய பிரதேசம், இந்தூரில் அடல் பிஹாரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அங்கு பேசிய அவர், 'ஜனநாயகத்தின் மீதான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார்' தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாஜ்பாய் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் என்றும், அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு அசாதாரணமானவர். தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் நவீன இந்தியாவை வடிவமைத்தார் என்று பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாஜ்பாயின் வாழ்க்கை, தலைமை என்பது வெறும் அதிகாரத்தைப் பற்றியது மட்டுமல்ல. சேவை, பொறுப்பு மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பைப் பற்றியது என்பதை தேசத்திற்கு நினைவூட்டுகிறது என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர், அரசியல்வாதி, நிர்வாகி, பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சிறந்த மனிதர் என அவரது முன்மாதிரியான செயல்களுக்காக நினைவுகூரப்பட்டு கவுரவிக்கப்படுகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக மேம்பாட்டுத் திட்டங்கள் தென் மாநிலத்தை கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன என்று விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.