தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த விஜய், இது குறித்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.
பெரியாரை சமூக நீதியின் முன்னோடி என்றும், மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்த பகுத்தறிவு போராளி என்றும் விஜய் புகழ்ந்துள்ளார். மேலும், பெரியாரை தனது கொள்கை தலைவர்களில் ஒருவராக குறிப்பிட்டுள்ள அவர், பெரியார் காட்டிய சமத்துவ பாதையில் பயணித்து சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் தவெக கால்பதித்த பிறகு, திராவிட சித்தாந்தத்தின் அடையாளமான பெரியாரை தனது கொள்கை வழிகாட்டியாக விஜய் தொடர்ந்து முன்னிறுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Edited by Mahendran