சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனித நேயத்தை விட விலங்குகளின் பாசம் மேலானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறிய பூனைக்குட்டி ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து தவிக்கிறது. அப்போது அதே தண்டவாளத்தில் ரயில் மிக வேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு பெரிய நாய், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் குதிக்கிறது. ரயில் நெருங்குவதற்கு சில நொடிகள் முன்பாகவே, அந்த பூனைக்குட்டியை தனது வாயால் கவ்விப் பிடித்து பிளாட்பாரத்தின் மேல் தூக்கி விட்டு அதன் உயிரைக் காப்பாற்றுகிறது.
இந்தக் நெகிழ்ச்சியான வீடியோ கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி பகிரப்பட்டதில் இருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஆபத்தான நேரத்தில் நாய்க்குட்டியைக் காப்பாற்றிய அந்த நாயின் சமயோசித புத்தியையும், தைரியத்தையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன; சிலர் இது ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.