சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், திமுகவை விமர்சிப்பவர்கள் குறித்துக் குறிப்பிடும்போது, “விஜய் உள்ளிட்டோர் திமுகவை ஒரு தீய சக்தி எனச் சொல்கிறார்கள்” என்ற ரீதியில் பேசியிருந்தார். அந்த உரையில், “அவங்க என்ன நினைப்பாங்க, இவங்க என்ன நினைப்பாங்க? இப்படிப் பேசினால் திமுக நம்மை கூட்டணியில் வைத்திருப்பார்களா? நமக்கு ஓட்டு வருமா வராதா? என்றெல்லாம் ‘ஐ டோன்ட் கேர்’ (I don’t care).
View this post on InstagramA post shared by Sathis Kumar (@kalangaraivilakkam)
அதைப் பற்றி நான் கவலைப்பட்டதும் இல்லை, கவலைப்படுபவனும் இல்லை. நாளைக்கே திருமாவளவனை கூட வைத்திருப்பது தான் பிரச்சனை என்று திமுக நினைத்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன்” என ஆவேசமாகப் பேசியிருந்தார். .தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் காணொளியில், திருமாவளவன் பிறர் பேசுவதைக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துவிட்டு, அவர் நேரடியாகவே “திமுக ஒரு தீய சக்தி” என்று கூறுவது போல கத்தரித்து (Edit) வெளியிட்டுள்ளனர்.
மாற்றுத் தரப்பினர் விமர்சிப்பதை குறிப்பிட்டதையே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தவறாக எடிட் செய்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.