நாஞ்சில் சம்பத்திடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில், “பூத் கமிட்டி இல்லாமலே எங்களால் ஜெயிக்க முடியும்; எம்ஜிஆர் என்ற திரை பிம்பத்தின் கவர்ச்சியால் அதிமுக வளர்ந்தது போல, விஜய்யும் அதிமுகவை ரீப்ளேஸ் (Replace) செய்வார் என்ற வாதம் வருகிறதே?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த குபேந்திரன் என்பவர், “எம்ஜிஆருக்கு இருந்த ‘கரிஸ்மேட்டிக்’ (Charismatic) மதிப்பும், அவர் திமுகவில் ஏற்படுத்திய தாக்கமும் அனைவரும் அறிந்ததே. ஆனால், எம்ஜிஆர் எப்போதாவது தேர்தலில் தனியாக நின்றாரா? 1977-லோ அல்லது 1984-லோ அவர் தனித்துப் போட்டியிடவில்லை.
எம்ஜிஆருக்கே அந்த நிலைமைதான் எனும் போது, விஜய்க்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய கவரேஜ் (Coverage) கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ஊடகங்களின் மோசமான காட்சி அமைப்பும், தேர்தல் யூகதாரிகளின் கூட்டுச் சதியும் சேர்ந்து தேவையில்லாமல் விஜய்யை ஒரு மிகப்பெரிய உச்சத்தில் வைத்துக்கொண்டாடுவதாகக் குற்றம் சாட்டினார்.
“வைகோ அல்லது விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது இவ்வளவு டிஜிட்டல் ஊடகங்கள் இல்லை. ஆனால், இன்று நான் உட்பட எல்லா ஊடகங்களும் விஜய்க்குத் தரும் முக்கியத்துவம் என்பது ஒரு திட்டமிட்ட சதியில் போய் விழுந்து கிடப்பது போன்ற உணர்வைத் தருகிறது” என்று அவர் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது.