உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில், முன்னாள் விமானப் படை வீரரான பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் (58) என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையில் (IAF) இருந்து ஓய்வு பெற்ற யோகேஷ், தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் அசோக் விஹார் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று உள்ளூர் சந்தையில் இருந்து யோகேஷ் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரை, அடையாளம் தெரியாத வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் யோகேஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் உடல் ரீதியாக தாக்கி, அவரது தலையில் சுட்டுக் கொன்று விட்டு, உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். சுடப்பட்ட யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர் சூட்டிக்கொள்ளப்பட்டதற்கு திருமணத்தை தாண்டிய உறவு உட்பட பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறதாக போலீசார் கூறியுள்ளனர்.இந்த வழக்கு விசாரணைக்காக அருகிலுள்ள கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளதாக ஏசிபி லோனி சித்தார்த்த கௌதம் தெரிவித்துள்ளார்.