கூகுளில் ‘67’ என்று தேடினால் உங்கள் திரையில் நடக்கும் ஒரு சிறிய மேஜிக் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த ட்ரெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரும் தங்கள் மொபைல், லேப்டாப்புகளில் இதை செய்து பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
அதாவது, கூகுளை திறந்து 67 அல்லது 6-7 என டைப் செய்து என்டர் கொடுத்தவுடன், சில விநாடிகளில் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் ஸ்கிரீன் லேசாக ‘ஷேக்’ ஆகும். இதைப் பார்த்து பதற வேண்டாம்; இது எந்த தொழில்நுட்பக் கோளாறும் அல்ல.
உங்கள் சாதனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பயனர்களை சிரிக்க வைக்கவும், ஆச்சரியப்படுத்தவும் கூகுள் வழங்கும் ஒரு சிறிய ‘சர்ப்ரைஸ்’ மட்டுமே இது.இதேபோல், கூகுளின் மற்றொரு பிரபலமான ட்ரிக் தான் “Do a barrel roll”.
இதை தேடினால், உங்கள் திரை முழுவதுமாக 360 டிகிரி சுழன்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்.பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், இவை அனைத்தும் கூகுளின் பிரபலமான மற்றும் ரசிக்கத்தக்க ‘Easter Egg’ அம்சங்கள். இதனை பயனர்கள் ஆர்வத்துடன் முயன்று மகிழ்ந்து வருகின்றனர்.