தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் கவுண்டமணி இணைந்து விட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில் அது தொடர்பான விளக்கம் வெளிவந்துள்ளது. அதாவது அபிஷேக் கோபல்லா என்பவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவுண்டமணி விஜய் தம்பிக்காக 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறி ஒரு பதிவோடு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால் கவுண்டமணி அரசியலில் பெரிய அளவில் நாட்டமில்லாதவர். பொதுவாக திரைத்துறை சார்ந்த விழாக்களில் கூட அவர் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார்.
அதே நேரத்தில் கவுண்டமணி மற்றும் விஜய் இரண்டு படங்களில் மட்டுமே சேர்ந்து நடித்துள்ள நிலையில் அவரது மனைவியின் மரணத்திற்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இதனால் உண்மை இருக்குமோ என நம்பிய நிலையில் அதன் பிறகு தான் போலி என தெரியவந்துள்ளது. அதாவது செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த போது எடுத்த புகைப்படத்தில் கவுண்டமணியின் புகைப்படத்தை மாற்றி ஏஐ மூலம் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். மேலும் இதன் மூலம் கவுண்டமணி தமிழக வெற்றிக்கழகத்தில் இணையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.