தமிழகத்தில் 42.8 செ.மீ. மழை பதிவு... வடகிழக்கு பருவமழை நிறைவடைகிறது!
Dinamaalai December 28, 2025 04:48 PM

தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழைக்காலம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் இந்த பருவமழை, இந்த ஆண்டு இயல்பான அளவை நெருங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்ய வேண்டிய இயல்பான மழையின் அளவு 43.7 செ.மீ ஆகும். தற்போது வரை பெய்துள்ள மழையின் அளவு 42.8 செ.மீ. இது இயல்பை விடச் சற்று குறைவு என்றாலும், வரும் நாட்களில் பெய்ய வாய்ப்புள்ள மழையால் இந்த அளவு முழுமையடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த சீசனில் உருவான 'தித்வா' புயல் காரணமாக டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (டிசம்பர் 28) தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை (டிசம்பர் 29) கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 30ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 31 & ஜனவரி 1புத்தாண்டு தினத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.ஜனவரி 2தென் தமிழகத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை இருக்கும்; மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.