நடிகர் விஜய் சினிமாவுக்கு நடிக்க வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது. தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் 1992ம் வருடம் விஜய் கோலிவுட் நடிகராக அறிமுகமானர். அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் கோலிவுட் முன்னணி மற்றும் முக்கிய நடிகராக மாறினார் விஜய்.
மற்ற மொழி நடிகர்களும் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு விஜயின் வளர்ச்சி இருந்தது. இந்நிலையில்தான் கடந்த இரண்டு வருடங்களாக அரசியல்வாதியாகவும் ஒரு புதிய களத்தில் செயல்பட்டு வருகிறார் விஜய்
. விஜயை மிகவும் ரசிப்பவர்கள் அவர் அரசியலுக்கு போகக்கூடாது, அவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
ஆனால் விஜயோ இனிமே அரசியல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்
. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் நடந்தது. இதில், திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் விஜய் பேசியது ரசிகர்களிடம் கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தியது.
துவக்கத்திலிருந்து என் கூடவே இருந்தது என் ரசிகர்கள்தான். 33 வருஷமா என் கூட நின்னிருக்காங்க… அதானலதான் அடுத்த 33 வருஷத்துக்கு அவங்க கூட நிக்குறதுன்னு முடிவு பண்ணேன். எனக்கு ஒன்னுன்னா எனக்காக தியேட்டர்ல வந்து நிக்குறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுன்னா அவங்க வீட்ல போய் நான் நிப்பேன்..
எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக என் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றின்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடனை தீர்த்துட்டுதன் போவேன்’ என்று பேசியிருக்கிறார். விஜய் பேசப்பேச அரங்கில் கைத்தட்டல் பறந்தது. அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வேன் என்பதைத்தான் விஜய் நன்றிக்கடன் என குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.