தைவானில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பீதியில், வீதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள்..!
Seithipunal Tamil December 28, 2025 07:48 PM

தைவானின் இன்று 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த புதன்கிழமை தைவானில் 6.0 ஆக ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.