அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது!
Dinamaalai December 28, 2025 08:48 PM

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை கவனித்துக்கொள்ள வந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரைப் பொதுமக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினருக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்துள்ளார். நேற்று காலை அந்த வார்டில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கும்பகோணம் நாககுடி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (32) என்ற ஓட்டுநர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் அந்த இளைஞர் தனது செல்போன் மூலம் சிறுமியின் ரகசிய உறுப்புகளைப் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, அந்த இளைஞரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராமகிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது செல்போனைச் சோதித்த போது, அதில் சிறுமியை ஆபாசமாகப் படம் பிடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.