புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் மற்றும் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக, டெல்லி காவல்துறை 'ஆபரேஷன் ஆகத்' என்ற அதிரடி வேட்டையை நடத்தியது. கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீவிர சோதனையில், பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையின் போது, 24 நாட்டுத் துப்பாக்கிகள், 44 கத்திகள் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், திருடப்பட்ட 231 இருசக்கர வாகனங்கள் மற்றும் 350 செல்போன்களை மீட்ட போலீஸார், 22,500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுபான பாட்டில்களையும் கைப்பற்றினர்.
இதுவரை 2,800-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 850 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Edited by Mahendran