நாம் தமிழர் கட்சியில் (நாதக) வேட்பாளர் தேர்வு குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “நான் விதைக்கும் ஒரு விதையும் வீணாகப் போகாது” எனக் குறிப்பிட்டு, வேட்பாளர் தேர்வு தொடர்பான முடிவுகள் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
கடந்த ஆண்டு, வேட்பாளர்களை சீமான் தன்னிச்சையாகத் தேர்வு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியிலிருந்து பலர் விலகிச் சென்றனர். இந்நிலையில், வரவுள்ள தேர்தலிலும் வேட்பாளர் தேர்வு குறித்து சீமான் தமது முடிவில் மாற்றமில்லை என்பதை இப்பொதுக்குழு மேடையில் உறுதிப்படுத்தியுள்ளார்.