தமிழக வெற்றிப் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என்பதே பாஜக மற்றும் அதிமுகவின் நோக்கம் என்று வெளிப்படையாகக் கூறினார்.
இந்தக் கூட்டணியில் இணைவது குறித்து ஜனநாயகன் (விஜய்) தான் ஜனநாயக முறையில் முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்க்கு பாஜக விடுத்துள்ள இந்தத் தொடர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.