சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெற்று வந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள், இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட 800 முகாம்கள் மூலம் சுமார் 12.36 லட்சம் மக்கள் பயனடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அடிமட்ட அளவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே இந்த முகாம்களின் முக்கிய நோக்கமாகும். கூடுதல் நாட்களில் இந்த முகாம்கள் நடைபெறுவதால், பணிக்குச் செல்பவர்கள் மற்றும் முதியோர்கள் தங்களுக்கு வசதியான நாட்களில் கலந்துகொண்டு பயன்பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.