“என்னை ஒன்றும் செய்ய முடியாது”..பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த அரசியல் பிரமுகர் – வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மைகள்!!
SeithiSolai Tamil December 29, 2025 12:48 PM

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாஜக கவுன்சிலர் அசோக் சிங் என்பவர் மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் அவரை வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அசோக் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தன் மீது புகார் அளித்தால் எதுவும் நடக்காது என்றும், தன்னால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் அந்தப் பெண்ணை மிரட்டுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் ஜிட்டு பட்வாரி பகிர்ந்து, ஆளுங்கட்சியினரின் இத்தகைய போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், அசோக் சிங் ஒரு குற்றப் பின்னணி கொண்டவர் என்றும், ஏற்கனவே அவர் மாவட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>
தற்போது மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு குறித்து மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. போலீசார் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.