ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் எதிர்பாராத விதமாக இரண்டே நாட்களில் முடிவடைந்தது. பேட்டிங்கிற்கு சற்றும் ஒத்துழைக்காத ஆடுகளத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கும், தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 110 ரன்களுக்கும் சுருண்டன. இரண்டாவது இன்னிங்ஸில் 42 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெற்றி: 175 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆடுகளம் குறித்து பிட்ச் பராமரிப்பாளர் மேத்யூ பஜ் கூறுகையில், "ஆடுகளத்தில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடப்பட்டதால், பந்து முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக மாறிவிட்டது. முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் வீழ்ந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். புற்களைக் கொஞ்சம் குறைத்திருந்தால் பேட்டிங்கிற்கு உதவியிருக்கும்" என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டி 4 அல்லது 5 நாட்கள் நீடித்தால் மட்டுமே அது ரசிகர்களைக் கவரும் என்றும், அடுத்த ஆண்டு பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமநிலையான ஆடுகளத்தைத் தயாரிப்போம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

டெஸ்ட் போட்டி 5 நாட்கள் நடைபெறும் என்ற அடிப்படையில் டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கும். ஆனால், போட்டி 2 நாட்களில் முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ. 60.59 கோடி (சுமார் 11 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டும் 2 நாளில் முடிந்த நிலையில், மீண்டும் ஒருமுறை இது நிகழ்ந்தது வாரியத்தைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!