சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்றே குறைந்து பொதுமக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 சரிந்து, தற்போது ரூ. 1,04,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 80 குறைந்து ரூ. 13,020-ஆக உள்ளது.
கடந்த சனிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் சவரன் ரூ. 1,04,800-க்கு விற்பனையான நிலையில், சர்வதேச சூழல்கள் மற்றும் முதலீட்டு மாற்றங்களால் இன்று இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 281-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 4,000 சரிந்து ரூ. 2.81 லட்சத்திற்கும் விற்பனையாகிறது. கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த விலை இன்று குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு சாதகமான செய்தியாக அமைந்தாலும் வரலாறு காணாத ஏற்றத்தை தங்கம், வெள்ளி கண்டுள்ளது.
Edited by Mahendran