கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை துஹிடா என்பவரது 6 வயது மகன் சுஹன், தனது அண்ணன் ரயனுடன் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையினால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வேலை முடிந்து வீடு திரும்பிய தாய், சுஹன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், வீட்டின் அருகே சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் இருந்து சிறுவன் சுஹன் சடலமாக மீட்கப்பட்டான். அண்ணனுடன் ஏற்பட்ட சிறு சண்டையால் சிறுவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டானா அல்லது வேறு ஏதேனும் விபத்து நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.