தோழி வீட்டிலேயே நகைகளைத் திருடிய இளம்பெண் கைது!
Dinamaalai December 29, 2025 05:48 PM

சென்னை கே.கே.நகர் பகுதியில் தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற பெண் ஒருவர், அங்கிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் வசிப்பவர் ஜெயலட்சுமி. இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 தங்கச் செயின்கள், 1 தங்க டாலர், 1 ஜோடி மெட்டி ஆகியவை திடீரென மாயமாகின. பல இடங்களில் தேடியும் நகைகள் கிடைக்காததால், ஜெயலட்சுமி இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பதிவு செய்த போலீசார், ஜெயலட்சுமியின் வீட்டிற்குச் சமீபகாலமாக வந்து சென்றவர்கள் யார் யார் என்ற பட்டியலைச் சேகரித்தனர். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்து சென்ற உறவினர்கள் மற்றும் தோழிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜெயலட்சுமியின் தோழியான மோனிஷா என்பவர் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். தோழி என்ற உரிமையில் வீட்டிற்கு வந்த அவர், ஜெயலட்சுமி கவனிக்காத நேரத்தில் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மோனிஷாவைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட நகைகள் மீண்டும் ஜெயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டன
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.