தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டி... தமிழகத்தின் ரித்விக் சஞ்ஜீவி சாம்பியன்!
Dinamaalai December 29, 2025 07:48 PM

87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் ரித்விக் சஞ்ஜீவி மகுடம் சூடியுள்ளார். இறுதிப்போட்டியில் அரியானா வீரரை நேர் செட்களில் வீழ்த்தி அவர் இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

விஜயவாடாவில் நடைபெற்ற இந்தத் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்ஜீவி, அரியானா மாநிலத்தின் பாரத் ராகவை எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கம் முதலே ரித்விக் சஞ்ஜீவி மிகுந்த நிதானத்துடனும், ஆக்ரோஷமாகவும் விளையாடினார். பாரத் ராகவின் சவால்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்தார்.

முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றிய ரித்விக், இரண்டாவது செட்டில் கடும் போராட்டத்திற்குப் பிறகு 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியில் 21-16, 22-20 என்ற நேர் செட்களில் பாரத் ராகவை வீழ்த்தி, தேசிய சீனியர் சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தினார்.

தேசிய அளவிலான மிக உயரிய இந்தப் போட்டியில் தமிழக வீரர் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது, மாநில பேட்மிண்டன் வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரித்விக் சஞ்ஜீவியின் இந்த வெற்றி, வரும் காலங்களில் சர்வதேசப் போட்டிகளில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்புகளைப் பிரகாசப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.