சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிறுவனரும் புதிய தலைவருமான டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்துக் கண்ணீருடன் உரையாற்றினார். அன்புமணியின் செயல்பாடுகள் தன்னை மார்பிலும் முதுகிலும் குத்துவது போல் உள்ளதாக அவர் உருக்கமாக தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை; சரியாக வளர்த்திருந்தால் அவர் இன்று என்னை இப்படி தூற்றமாட்டாரார். ஒரு தந்தையாக அவருக்கு தேவையான அனைத்தையும் செய்தேன், ஆனால் அவர் என்னை துரோகத்தால் அவமானப்படுத்துகிறார்.
30 ஆண்டுகாலம் உழைத்த ஜி.கே. மணியையே அவர் அவமதித்தார். தற்போது 95 சதவீத தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். அன்புமணியிடம் 5 சதவீதத்தினர் கூட இல்லை" என்றார். மேலும், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அமையும் வெற்றி கூட்டணி, அன்புமணிக்கு சரியான பாடத்தை புகட்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாமக தலைவராக ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதுடன், கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வுகளை முடிவெடுக்கும் முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது.
Edited by Mahendran