மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய், இன்று இரவு தியானி விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய்யை காண அவரது ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.
இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் அவரை சூழ்ந்து செல்ல ஆர்வத்தில் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
விஜய் காருக்கு அருகில் வரும் போது ரசிகர்கள் முண்டியடித்து வந்ததில் சிக்கி, சற்று தடுமாறி விழுந்துள்ளார். உடனடியாக பாதுகாவலர்கள் மீட்டு பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.