அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரியாலிட்டி ஷோ நடிகர் டோனி மெக்காலிஸ்டர், சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்பியது மற்றும் வளர்ப்பு நாய்களுடன் பாலியல் ரீதியாக அத்துமீறியது ஆகிய புகார்களின் கீழ் வாரன் கவுண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு ‘நெய்பர்ஸ் வித் பெனிபிட்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கூகுள் கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ஆபாசப் படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பிணைத் தொகை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவர் இனி சிறுவர்கள் மற்றும் விலங்குகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் கடும் நிபந்தனை விதித்துள்ளது. அவரிடமிருந்த இரண்டு நாய்களும் மீட்கப்பட்டு தற்போது அதிகாரிகளின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.