பள்ளத்தில் கார் பாய்ந்து 2 இந்திய இளம்பெண்கள் பரிதாப பலி... அமெரிக்காவில் தொடரும் சோகம்!
Dinamaalai December 30, 2025 02:48 AM

தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் கர்லா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த தோழிகள் மஹானா ராணி (24), புவனா (24) அமெரிக்காவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று, கலிபோர்னியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து தற்போது வேலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று தங்கள் நண்பர்கள் மேலும் 4 பேருடன் காரில் அலபாமா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து திரும்பும் போது மலைப்பாங்கான பகுதியில் காரின் கட்டுப்பாட்டை டிரைவர் இழந்ததால், கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராணி, புவனா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த இளம்பெண்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அவர்களின் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.