மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு கோர விபத்து; 13 பேர் பலி; 98 பேர் படுகாயம், 05 பேர் கவலைக்கிடம்..!
Seithipunal Tamil December 30, 2025 07:48 AM

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் என்ற ரயில் சுமார் 241 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் நேற்று சென்றுகொண்டிருந்த்துள்ளது. குறித்த ரயில் ஓக்ஸாகா மற்றும் வெராக்ரூஸ் எல்லையில் உள்ள நிஜண்டா நகருக்கு அருகே சென்ற போது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களில் 05 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தினால் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.