திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கானது; 'பாஜகவுக்கு ஒத்து ஊதும் பழனிசாமி, கமலாலயத்தில் எழுதி தருவதை அதிமுக அறிக்கையாக வெளியிடுகிறார்'; மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு..!
Seithipunal Tamil December 30, 2025 08:48 AM

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று நடைபெற்றது.  இம்மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்; '' பாஜ எழுதி கொடுப்பதை, அதிமுக 'லெட்டர்பேடில்' இபிஎஸ் எழுதித் தருகிறார்,'' குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

அத்துடன், பெண்கள் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளதாகவும், தேர்தல் அறிக்கை தான் திமுகவின் கதாநாயகன் என்றும், அதை தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப்போவது உறுதி என்றும், மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறதாகவும், துவக்க கால திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர் என்று பேசியுள்ளார்.

அத்துடன், திராவிட இயக்கத்தினால், பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பெண்கள் ஆண்டிராய்டு மொபைல் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால், தமிழகத்தில் ஐபோன்களை பெண்கள் உற்பத்தி செய்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பெண்களுக்கு சொத்துரிமை அளித்தது திமுக என்றும், பெண்கள் சமையல் அறையை தாண்டி செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்தனர். ஆனால், இதனை உடைத்தது திராவிட இயக்கம் என்று தெரிவித்துள்ளார்.

உலகில் பல நாடுகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும், உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கருணாநிதி கொண்டு வந்தார் என்றும், தமிழகத்தில் இப்போது பெண் மேயர்கள் தான் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு கிடைத்த அதிக பிரதிநிதித்துவம் போல், சட்டசபையிலும், பார்லிமென்டிலும் கிடைக்க வேண்டும். இதுதான் திமுகவின் லட்சியம். இதற்காக போராடுகிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

அத்துடன், தேவையில்லாத நடைமுறைகளோடு 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீட்டை பாஜ அரசு கொண்டு வந்துள்ளதாகவும், எப்போது செயல்படுத்தப்படும் எனத் தெரியாது. பெண்களுக்கு சட்டசபையிலும், பார்லிமென்டிலும் அங்கீகாரம் பெறுவதை பாஜ விரும்பவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் தான் பாஜ காலம் கடத்துகின்றதாகவும், திமுக அரசு பெண்களுக்கான ஆட்சி. திமுக பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் எனது தாயார் போலவும், சகோதரிகள் போலவும், மகளை போலவும் நிறைய பேர் உள்ளனர். உஅவர்களுக்கு என்ன தேவை என்ன பார்த்து பார்த்து கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகையால் பல பெண்களுக்கு, சுயமரியாதையை தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும்,திமுகஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு தான் முதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம் என்று கூறியுள்ளார். இதற்காக விடியல் பயணத்தால் பெண்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளதாகவும், புதிய வாய்ப்புகளை தேடி பெண்கள் ஏராளமானோர் விடியல் பயணம் மேற்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

 

அத்துடன், 07 லட்சம் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்பவதால், பெண்கள் கல்வி பெறுவது அதிகரித்துள்ளதாகவும், புதுமைப்பெண் திட்டத்தில் மகளோடு, மகனோடு கல்லூரி செல்லும் பெண்ணை பார்த்து இருக்கிறேன் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், மகளிர் சுய உதவிக்குழு கருணாநிதி ஆட்சியில் துவங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்றும், ஏன் பெண்களுக்கு முன்னுரிமை என சிலருக்கு சந்தேகம் வரும்.பெண்கள் முன்னேறினால் சமூகம் முன்னேறும் என இவ்வளவு செய்கிறோம் என்றும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஆனால், பாஜ அரசு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இழுத்து மூடியுள்ளதாகவும், கடந்த 04 ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பயனடைந்தவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என்று கூறியுள்ளார். தற்போதில்லை பெண்களுக்கு வாழ்வளித்த திட்டத்தை நிறுத்தி உள்ளதாகவும், இதனால் கிராமப்புற பொருளாதாரம் அடி வாங்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்கு ஒத்து ஊதுவது அதிமுக பழனிசாமி. ஆண்டுக்கு 47 நாள் தான் வேலை தான் கொடுத்தனர். அதுவும் கொடுக்கப்போவதில்லை. மாநில அரசுகளிடம் நிதியை பகிர்ந்து கொடுத்துள்ளனர். பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், வேலைநாட்கள் கிடைக்குமா என சந்தேகம் என்று விமர்சித்துள்ளார். 

பாஜவின் நடவடிக்கை பெண்களுக்கு எதிரானது என்றும், சட்டத்தை படித்து பார்த்தால் தானே இபிஎஸ்க்கு தெரியும். கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை அதிமுக லெட்டர் பேடில் எழுதி கொடுக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளதாகவும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்களை விரிவுபடுத்தப் போகிறாம் என்றும் அறிவித்துள்ளார். மேலும்,ஆண்கள், வாசல் வரைதான் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், பெண்கள், வீட்டில் சமையல் அறை வரை செல்ல முடியும். பெண்களின் மனதிற்குள் செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

இதனை பயன்படுத்தி நமது திட்டங்களை பெண்களிடம் சொல்ல வேண்டும் என்றும், நான் கனிமொழிக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அண்ணன்தான். அடுத்த அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சி பெண்களுக்கானதாக தான் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.