2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக திமுகவின் அசைக்க முடியாத பலமாக இருந்து வரும் 'சிறுபான்மையினர் வாக்கு வங்கியில்' விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, திமுகவிடம் உள்ள சுமார் 13% சிறுபான்மையினர் வாக்குகளில், விஜய் தனியாக போட்டியிட்டால் மட்டும் சுமார் 7% வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் அதீத செல்வாக்கு, திமுகவின் இந்த 'கோர்' வாக்குகளை பாதிக்கும்.
முன்பு திமுகவிற்கு மட்டுமே ஆதரவளித்து வந்த சிறுபான்மையின இளைஞர்கள், இப்போது மாற்றத்தை விரும்பி தவெக பக்கம் நகர தொடங்கியுள்ளனர். இது வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்புகளை சிக்கலாக்கி, தேர்தல் களத்தின் போக்கையே மாற்றக்கூடும் என விவாதிக்கப்படுகிறது.
விஜய்யின் இந்த அரசியல் வருகை, பாரம்பரிய வாக்கு வங்கிகளை சிதறடிக்கும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva