நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சந்தரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் தேர்தடுக்கப்பட்டுள்ளமைக்கு சென்னை கலைவாணர் அரங்கில், வரும், ஜனவரி 02-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ., - அ.தி.மு.க., மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை மாதம், தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட, தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

ஏற்கனவே தமிழக பா.ஜ.,தலைவராக இருந்த இவர், மஹாராஷ்டிரா ஆளுநகரவும் பதவி வகித்தார். இவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், முதல் முறையாக அக்டோபர் இறுதியில் கோவை வந்தார். அங்கு அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜனவரி 02-ஆம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை வரவுள்ளார். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக சென்னை வரும் அவருக்கு, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.