திடீரென ஊருக்குள் புகுந்த புலி.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்.. மபியில் பரபரப்பு சம்பவம்!
TV9 Tamil News December 30, 2025 11:48 AM

போபால், டிசம்பர் 30 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், உமரியா மாவட்டத்தில் பந்தவ்கர் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி சிங்கம், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், பூங்காவுக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றி நேற்று (டிசம்பர் 29, 2025) புலி ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புலி ஊருக்குள் நுழைவதை கண்ட கிராம மக்கள் அங்கும் இங்கும் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கிய நிலையில், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையி, கிராமத்திற்குள் புலி நுழைந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊருக்குள் புகுந்து இளைஞரை தாக்கிய புலி

ஊருக்குள் புகுந்த புலியை கண்டு பலரும் பயந்து ஓடிய நிலையில், அங்கிருந்த கோபால் என்ற இளைஞரை அந்த புலி தாக்கியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் பலத்த காயமடைந்து சுய நினைவை இழந்துள்ளார். இதனை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த கிராம் மக்கள் அந்த நபரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்!

வீட்டின் மேற்கூரை மீது ஏறி நின்று சத்தம் எழுப்பிய பொதுமக்கள்

आज मैं गाँव में पंचायत लगाकर सभी की सुनवाई करूँगा, क्यूँ मेरा जीना हराम कर रहे हो, मेरे जंगल में कब्ज़ा कर, मेरा इलाका ख़त्म करके ..??#MadhyaPradesh #bandhavgarh #umaria #tiger #viral #highlight pic.twitter.com/0rG8TAvwnk

— DEEPAK YADAV (@YadavDeepakya22)

மேலும் புலியை கண்ட கிராமத்தினர் சிலர் தங்களது வீடுகளின் மேற்கூரைகள் மீது ஏறி நின்றுக்கொண்டு புலியை விரட்டும் வகையில் சத்தம் எழுப்பியுள்ளனர். இதற்கிடையே தகவல் அறிந்து அந்த கிராமத்திற்கு சென்ற வனத்துறையினர் கிராமத்தில் சுற்றித் திரிந்த அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : பாரா கிளைடிங் செய்யும்போது கீழே விழுந்து பலியான வீரர்.. இமாச்சலில் சோக சம்பவம்!

பின்னர் அந்த புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக வனத்துறையினர் அதனை கூண்டில் ஏற்றி எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக அந்த கிராமத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.