தர்மபுரியில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்ற சிபிஎம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில செயலாளர் பெ. சண்முகம், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடிப் பேசினார். எப்படியாவது மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காகவே, அதிமுக தற்போது பாஜகவுடன் கைகோர்த்து அவர்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “ஒருவேளை இந்தத் தேர்தலில் தப்பித்தவறி இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் கூட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் முதலமைச்சர் ஆக முடியாது. அதோடு மட்டுமல்லாமல், பாஜகவின் பிடியில் சிக்கியுள்ள அதிமுக என்ற கட்சியே தமிழகத்தில் இல்லாத ஒரு நிலை உருவாகலாம்” என எச்சரிக்கை விடுத்தார். இபிஎஸ்-ஐ குறிவைத்து அவர் பேசிய இந்த கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.