ஆசிரியர் கையை உடைத்த காவலர்கள்?
Top Tamil News January 02, 2026 02:48 AM

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரின் கையை காவலர்கள் உடைத்ததாக புகார் எழுந்துள்ளது.


சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் அருகே 7வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு  7வது நாளாக போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வாரமாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தபோது ஆசிரியர் ஒருவரின் கையை காவலர்கள் உடைத்ததாக சக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கை உடைந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஆசிரியர் கேஎம்சி மருத்துவமனையில் ஈடுபாட்டனர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.