தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறை நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் கௌதம் ராம் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மூத்த மகனும் ஆவார். இப்படி பிரபலங்களின் வாரிசு நடிகராக வலம் வரும் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கடந்த 2013-ம் ஆண்டு கடல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன இவர் இந்தப் படத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தாலும் முன்னணி நடிகராக மாறினாரா என்றால் இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கௌதம் ராம் கார்திக் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஆகஸ்ட் 16 1947. பீரியட் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியானது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால் இந்த 2026-ம் ஆண்டு இவரது நடிப்பில் படங்கள் வரிசைக் கட்டிக் காத்திருக்கின்றது.
கௌதம் கார்த்திக் ரூட் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ரஜினி:இந்த நிலையில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ரூட். இந்தப் படத்தை இயக்குநர் சூர்யபிரதாப் இயக்கியுள்ளார். இவர் ரூட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் அபர்சக்தி குரானா, பவ்யா திரிகா, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தி முடிவடைந்த நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
Also Read… அஜித் குமாருக்கு 65-வது படத்திற்காக கதை சொன்ன பிரபல இயக்குநர்?
கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:As far as blessings go, having my idol, the Legendary Super Star, Rajinikanth sir releasing the first look poster for our project, ROOT, is truly an unbelievable experience. What a surreal way to start 2026! Truly feeling blessed and grateful!
With his blessings, ROOT steps in to… pic.twitter.com/ENGjuGspWR— Gautham Ram Karthik (@Gautham_Karthik)
Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்