தொலைக்காட்சியில் ஜன.4ல் பராசக்தி விழா ஒளிபரப்பு?…ஜனநாயகனை விடாமல் துரத்தும் பராசக்தி
CineReporters Tamil January 02, 2026 05:48 AM

விஜய் நடிப்பில் பொங்கலையொட்டி வருகிற 9ம் தேதி வெளியாக உள்ள படம் ஜனநாயகன். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ என முன்னணி நட்சத்திரங்கள் பல நடித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமையை ஜி டீவி பெற்றிருந்தது. இந்த விழா நிகழ்ச்சிகள் வருகிற 4ம் தேதி ஒளிபரப்பாகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலையொட்டி 10ம் தேதி வெளியாக உள்ள படம் பராசக்தி. ஆரம்பத்தில் ஜனநாயகன் படம் வெளியாவதால் பராசக்தி 10 நாட்கள் இடைவெளியில் வருவதாக இருந்தது. ஆனால் திடீரென 10ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் இது பெரும் விவாதமாக மாறி வருகிறது.

இந்த நிலையில் பராசக்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சியில் ஜனவரி 4ம் தேதி ஓளிபரப்புவதாக பேசப்படுகிறது. அதே தேதியில் ஜனநாயகன் விழா ஒளிபரப்பவதால் இதிலும் போட்டியா என பலரும் கருதுகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.