உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்த நிலையில் மக்கள் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் புத்தாண்டு பிறந்த தினத்தை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் நிலையில் சென்னையில் மழையுடன் புத்தாண்டு பிறந்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முல்லை நகரில் 11 cm அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
இதே போன்று பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதலே புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொட்டும் மழையிலும் மக்கள் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்ற நிலையில் தூய்மை பணியாளர்களை கட்டிப்பிடித்து புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் புத்தாண்டு பண்டிகையில் கொட்டும் மழையிலும் நாங்கள் மகிழ்ச்சியாக பணி செய்வதாக தூய்மை பணியாளர் பெண் ஒருவர் கூறிய நிலையில் தங்களை மழையிலும் கட்டிப்பிடித்து மக்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.